கலைஞர் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 10, 2024

கலைஞர் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி

featured image

புதுடில்லி, ஜூலை 10- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, மேனாள் முதலமைச்சர் கலைஞ ரின் நினைவு நாணயத்திற்கு ஒன் றிய நிதியமைச்சகம் அனுமதி அளித் துள்ளது. இது குறித்த அறிவிப்பை அரசு கெஜட்டில் விரைந்து வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மேனாள் முதல மைச்சரான திமுகவின் தலைவருக்காக “முத்தமிழ் அறிஞர் கலைஞர்கருணாநிதி” என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும் பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி ஒன்றிய நிதியமைச்சகத்திடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் கடந்த ஆண்டு கோரப் பட்டிருந்தது.

இந்நாணயத்தை, கடந்த ஜுன் 3இல் முடிந்த கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் வெளியிடத் திட்ட மிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப் பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது. இதன் பின்னணியில் நாணயத்திற்கான நடைமுறைகள் முடிவடையாதது காரணமானது.

தற்போது இவை அனைத்தும் முடிந்து நேற்று (9.7.2024) நாணயத் திற்கான அனுமதியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெப்பம் இட்டதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு மேனாள் முதல மைச்சர் கருணாநிதியின் நினைவு நாணயத்துடன், மேலும் இரண்டு நாணயத்துக்கும் அனு மதி அளிக் கப்பட்டுள்ளன. இதில், உச்ச நீதி மன்றத்தின் 75ஆவது ஆண்டு – விழா மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் நூற்றாண்டு விழாவிற்கான நினைவு நாணயங்களுக்கும் அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. இதற்கு முன், மேனாள் முதல மைச்சர்களான காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைவர்கள், பல் வேறு கலைஞர்கள் உள்ளிட்டோர் மீதான பல நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாதிரி வரைபடம்: நினைவு நாணயத்திற்கான மாதிரி வரைபடம் விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதை வடிவமைக்கும் பணியை ஒன்றிய நிதியமைச்சகம் செய்கிறது. இதனால், கலைஞர் கருணாநிதி நாணயத்தின் மாதிரி வரைபடம் தமிழ்நாடு அரசிடமிருந்து பெறப்பட்டது.

இதுபோல், மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்ட நினைவு நாணயம் இன்னும் நிலுவையில் உள்ளது. கடந்த 2020இல் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டில்லியில் சந்தித்தபோது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்திருந்தார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஒன்றிய அரசால் நினைவு நாணயங்கள் வெளியிடும் முறை கடந்த 1964இல் துவங்கியது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின்பெயரில் முதல் நினைவு நாணயம் வெளியானது. இந்த நினைவு நாணயங்கள் முக்கியத் தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக தொடர்ந்து வெளியாகின்றன.

இவற்றை, ஒன்றிய நிதி அமைச் சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்துவெளியிடுகிறது. கலைஞர் மு.கருணாநிதி உட்பட மூன்று நாணயங்கள் குறித்த உத்தரவை ஒன்றிய அரசின் கெஜட் டிலும் விரைவில் வெளியிட உத்தர விடப்பட்டுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் “டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி” என்ற பெயருடன், “தமிழ் வெல்லும்” எனும் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது.

No comments:

Post a Comment