வல்லம், ஜூலை 9- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 26.06.2024 அன்று நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றிய இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா “மாணவர்கள் போதைப் பொருளால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து இச்சமூகத்தில் நல்ல குடிமகனாக திகழ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் “போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள்” என்ற தலைப்பில் வல்லம் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் M.ஆர்த்தி வேதவள்ளி சிறப்புரை ஆற்றினார். அவர் கூறுகையில் “மாணவர்கள் கஞ்சா. மது போன்ற போதைப் பொருட்களை தவிர்த்து அவர்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் கலைக்குழு மூலம் மது. கஞ்சா போன்ற போதைப் பொருட்களால் ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் வகையில் பாடல் பாடி, மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வல்லம், காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலாத்தி தனது உரையில் பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்றவற்றின் மூலமாக அறிமுகமாகும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கூறிய அவர் ஓட்டுநர் உரிமம் பெற்று இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது தலைக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சி தொடக்கத்தில் இக்கல்லூரி பேராசிரியை கே.நீலாவதி வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் எஸ்.மைக்கேல்ராஜ் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment