நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா, கண்டுபிடிப்பது எப்படி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா, கண்டுபிடிப்பது எப்படி?

featured image

நாள்தோறும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பது சிறு வயது முதலே நம்மை விடாமல் விரட்டும் அறிவுரையாக இருக்கிறது.
தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடித்துப் பழகிய பலரும், நாள்தோறும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதை ஞாபகம் வைத்துப் பின்பற்றுவதில்லை. தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்த அலைபேசியில் (ரிமைண்டர்) நினைவூட்டி வைத்துப் பின்பற்றுவோரெல்லாம் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நாள்தோறும் 8 டம்ளர் தண்ணீர் என்பது ஒருவருக்குப் போதுமானதாகவும், வேறொருவருக்கு குறைவாகவும் தோன்றலாம். எனவே, அது அவரவரின் தனிப்பட்ட தேவையைப் பொறுத்தது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள். தாகம் எடுப்பதை நீர் வறட்சிக்கான அறிகுறியாக உணர்ந்து உடனே தண்ணீர் குடியுங்கள். வெயில் காலங்களிலும் உடலுழைப்பு அதிகமான நாள்களிலும் வழக்கத்தைவிட கூடுதலாக தண்ணீர் குடியுங்கள் என்கிறார்கள் இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட்ஸ்.

இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிசின் (Institute of Medicine), “ஆண்கள் நாளொன்றுக்கு 3 லிட்டர் அளவுக்கும், பெண்கள் 2 லிட்டருக்கும் சற்று அதிகமாகவும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நாளொன்றுக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. 150 மில்லி அளவுள்ள கப் அல்லது டம்ளரில் குடிக்கலாம்” என்று பரிந்துரைக்கிறது.

இந்த நிலையில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

“சிறுநீர் கழிக்கும்போது அதன் நிறத்தை கவனியுங்கள். வெள்ளையாக அல்லது வெளிர் மஞ்சளாக இருந்தால், நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம். அதுவே அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் நீங்கள் தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும் என்று புரிந்துகொள்ளுங்கள்” என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.

No comments:

Post a Comment