சென்னை, ஜூலை 12 தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் கோப்புகள், செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மாறிவருகின்றன. அந்த வகையில், சட்டப்பேரவையின் செயல்பாடுகளையும் டிஜிட்டல் வடிவில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் கூறியதாவது:
சட்டப்பேரவையில் கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகள், முக்கியமான விவாதங்கள் என அனைத்தும் தற்போது பேரவை நூலகத்தில் புத்தக வடிவில் உள்ளது. மக்கள் பார்வையிடும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக இது தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இதில், குறிப்பிட்ட ஒரு வார்த்தையை அதாவது கலைஞர், ஜெயலலிதா என பெயரை பதிவிட்டால், அவர்கள் பேசிய அனைத்தும் வரும். காவிரி, கச்சத்தீவு என முக்கிய நிகழ்வுகளை பதிவிட்டால் அதுதொடர்பான விவாதங்கள், நிகழ்வுகள் அனைத்தும் வரும். இப்பணிகள் முடிந்ததும் விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். தேசிய அளவிலான இ-விதான் இணையதளத்திலும், பேரவை நிகழ்ச்சி நிரல், கொள்கை விளக்க குறிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர, கருணாநிதி நூற்றாண்டு தொடர்பாக சட்டப்பேரவை செயலகம் தயாரித்துள்ள நூலும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
வெளிநாடுகளில் குடியேறும் குஜராத்திகள் எண்ணிக்கை அதிகரிப்பு
புதுடில்லி, ஜூலை 12 குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிநாடுகளில் குடியேறுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
2023-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 241 பேர் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கூறி தங்கள் கடவுச் சீட்இடை ந்திய அரசிடம் திருப்பி ஒப்படைத்துள்ளனர். 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 2 மடங்கு அதிகம் ஆகும். 2022-இல் 241 பேர் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டனர். நடப்பு ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் அம்மாநிலத்தைச் சேர்ந்த 244 பேர் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.
2014-2022 வரையிலான காலகட்டத்தில் குஜராத்திலிருந்து மட்டும் 22,300 பேர் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் டில்லி (60,414) முதல் இடத்திலும், பஞ்சாப் (28,117) இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று கூறுபவர்களில் பெரும்பாலானோர் 30 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் குடியுரிமை பெறுகின்றனர்.
No comments:
Post a Comment