புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்

featured image

சென்னை, ஜூலை8- 20 ஆண்டுகளான காற்றா லைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க செய்ய அறிவுறுத்தி வரு கிறது. அந்த வகையில் சூரிய சக்தி மற்றும் காற் றாலை மின் உற்பத்தியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் கூடுதலாக 586 மெகாவாட் திறனில் காற்றாலைகள் நிறுவப்பட்டன.

காற்றாலை மின் உற்பத்தியை பொறுத்த வரை இந்திய மாநிலங் களில் தமிழ்நாடு இரண் டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 150 மீட்டர் உயரத்தில் 95 கிகாவாட் காற்று வீசும் திறன் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த நிறுவு திறன் மாநில மற்றும் ஒன்றிய தொகுப்பை சேர்த்து 10,591 மெகாவாட் ஆக இருக்கிறது. இதில் மாநில தொகுப்பில் மின் வாரியத்திற்கு சொந்தமாக காற்றாலைகளும், தனியார் காற்றாலைகளும் அடங்கும். இந்நிலையில் 20 ஆண்டுகளான காற்றா லைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் காற்றாலை சீசன் மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் காற் றாலை மின் உற்பத்தி அதிகளவில் இருக்கும். தமிழ்நாட்டின் மாநில தொகுப்பிலுள்ள மொத்த காற்றாலை நிறுவுதிறன் 9015.09 மெகாவாட், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13,000 மில்லியன் யூனிட்டுகள் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தனியார் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான பழைய காற்றாலைகளை புதுப் பித்து இயக்குவதில் நாட்டி லேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இதுவரை 26.20 மெகாவாட் கொண்ட 96 பழைய தனியார் காற்றாலைகள் புதுப்பிக் கப்பட்டுள்ளன. மேலும், 961.98 மெகாவாட் திறன் கொண்ட சுமார் 1,368 காற்றாலைகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் 20 ஆண்டுகளான காற் றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment