சென்னை, ஜூலை 12 தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பு, தரத்தை மேம்படுத்துவதற்கு ரூ. 3,000 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழ்நாடு சுகாதார தரத்தை மேம்படுத்தும் வகையில், உலக வங்கியின் உதவியுடன், சுகாதார சீரமைப்பு திட்டம் 2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 5 ஆண்டு கொண்ட திட்டத்தில் ரூ. 2,854.74 கோடி மதிப்பில் பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ரூ. 1,998.32 கோடி உலக வங்கியும், ரூ. 856.42 கோடி மாநில அரசும் நிதி அளிக்கிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை உலக வங்கியிடமிருந்து ரூ. 1,621.86 கோடி பெறப்பட்டு தொற்றா நோய், விபத்து சிகிச்சை, பேறுசார் மற்றும் குழந்தைகள் நல திட்டம், மருத்துவ உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டம் நிகழாண்டுடன் முடிவடையும் நிலையில், இத்திட்டத்தில் மீதமுள்ள ரூ. 376.46 கோடி மற்றும் புதிய கட்டமைப்புகளுக்காக ரூ. 3 ஆயிரம் கோடி நிதியுதவியை வழங்கக் கோரி, உலக வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அரசு கூடுதல் செயலா் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலை துணைவேந்தா் நாராயணசாமி ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனா். அங்கு, வாசிங்டனில் உள்ள உலக வங்கி தலைமை அலுவலத்தில் அந்த வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவா் மார்ட்டின் ரைசா் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து 10.7.2024 அன்று ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்டு உள்ள செயல் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டின் மருத்துவக் கட்ட மைப்பை உலக வங்கி அதிகாரிகள் பாராட்டியுள்ளனா். தற்போது கேட்கப் பட்டுள்ள ரூ. 3,000 கோடி நிதியுதவி அளிக்கவும் முன்வந்துள்ளனா். உலக வங்கி அதிகாரிகள் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், மக்கள் நல்வாழ்வுதுறை செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள். உலக வங்கி யுடனான சந்திப்பு வெற்றிகரமாக முடிந் துள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment