சென்னை, ஜூலை 7- ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2011ஆம் கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வரும் 2024-2025ஆம் கல்வியாண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நாள் தொடங்கப்பட்டது.
அதன்படி 219 மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை அவர்களுக்கான சேர்க்கை ஆணையை வழங்கினார்.
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை, ஜூலை 7- 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 11.07.2024 வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மய்யத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment