தலைசிறந்த மனித நேயம் மூத்த குடிமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்த வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

தலைசிறந்த மனித நேயம் மூத்த குடிமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்த வேண்டும்

featured image

சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னை, ஜூன் 6 மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து அவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

காவல் நிலையங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கருதும் பொதுமக்கள், மேல் நடவடிக்கையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கின்றனர். அதன்படி திங்கள் முதல் வெள்ளிவரை அரசு விடுமுறை நாள்களை தவிர நாள்தோறும் கார் மனுக்கள் பெறப்படுகின்றன. புதன்கிழமைகளில் காவல் ஆணையரே பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை நேரில் பெற்று வருகிறார்.

அதன்படி, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று (5.6.2024) பொதுமக்கள் 12 பேரின் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதேபோல், காவல் துறையைச் சேர்ந்த 11 பேரின் மனுக்களையும் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுமட்டும் அல்லாமல் 60 மற்றும் அதற்கு மேல் வயதுடைய மூத்த குடிமக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், காவல்துறையினரே சம்பந்தப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, “மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது துணை ஆணையர்கள் தலைமையிலான காவல்து றை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டுக்கு நேரில் சென்று விசா ரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, துணை ஆணை யர்கள் செயல்பட்டு வருகின்றனர்.மேலும், மூத்த குடிமக்களுக்கு உதவுவ தற்காக ‘பந்தம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தின் எண்ணில் (9499957575) தொடர்பு கொண்டு பய னடையலாம்” என்றார்.

No comments:

Post a Comment