புதுடில்லி, ஜூன் 6- மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை விடக் குறைவு என்பதால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாஜக கடந்த முறை 303 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை 60 இடங்களை இழந்துள்ளது.
ஆந்திராவில் என்டிஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 16 இடங்களில் வென்றுள்ள நிலையில், பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியு 12 இடங்களில் வென்றது. இந்த இரு கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜகவால் ஆட்சியை அமைக்க முடியும். மேலும், ஷிண்டே சிவசேனா 7 தொகுதிகளையும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 5 தொகுதிகளையும் வென்றுள்ளது. இவை தவிர ஜேடிஎஸ், ராஷ்ட்ரிய லோக் தளம் தலா இரண்டு இடங்களில் வென்றன
காங்கிரஸ் கடந்த 2019இல் 52 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், இந்த முறை 99 இடங்களை வென்றது.. குறிப்பாக மகாராட்டிரா, ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் காங்கிரஸ் நல்ல வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்தியா கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்கள், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்கள், திமுக 22 இடங்கள், தாக்கரே சிவசேனா 9 இடங்கள், சரத் பவார் என்சிபி 8 இடங்கள், ஆர்ஜேடி 4 இடங்கள், சிபிஎம் 4 இடங்கள், IUML மற்றும் ஆம் ஆத்மி, ஜார்க்ண்ட் முக்தி மோர்ச்சா தலா 3 இடங்கள், விசிக மற்றும் சிபிஅய், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலா 2 இடங்களில் வென்றுள்ளன.
No comments:
Post a Comment