பண்டைய சமண மரபு புத்தகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

பண்டைய சமண மரபு புத்தகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

featured image

சென்னை, ஜூன் 15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.6.2024 அன்று முகாம் அலுவலகத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் அவர்களின் மனைவி ருச்சி ப்ரீதம் எழுதிய “Ancient Jain Legacy of Tamil Nadu” (தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

எழுத்தாளர் ருச்சி ப்ரீதம் எழுதிய “தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு” என்ற புத்தகத்தில், மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் கலையில் சமண மதத்தின் தாக்கத்தையும், தமிழ்நாட்டின் அடையாளத்தில் சமண மதத்தின் ஒருங்கிணைந்த பங்கினையும் எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாட்டின் கலை, கட்டடக்கலை மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் தாக்கம் குறித்த நுணுக்கமான விவரங்களுடன், மதத்திற்கு அப்பாற்பட்ட சமண மதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இப்புத்தகம் சமண மதத்திற்கும் தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்புகளை ஆராய்வதுடன், சமண மதத்தின் நீடித்த செல்வாக்கிற்கு சான்றாக விளங்குகிறது.

இந்நிகழ்வின்போது, சந்தியா பதிப்பகத்தின் உரிமையாளர் நட்ராஜன், டி.ஆர்.ஏ. நிறுவனத்தின் இயக்குநர் தாமன்பிரகாஷ் ரத்தோட், ரஞ்சித் ரத்தோட், சுதீர் லோடா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment