*கருஞ்சட்டை *
ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து அமைச்சரவை பதவி ஏற்றது. அந்தப் பதவியேற்பு விழாவுக்கு பூரி ஜெகன்னாதருக்கு அழைப்பிதழ் கொண்டு போய்க் கொடுத்துள்ளனர்.
ஒருவர், இருவர் அல்லர்; ஒடிசா துணை முதலமைச்சர் பிரவட்டி பாரிடா, பிரிதி விராஜ், ஹரிச்சந்திரன், இரஷிஸ் ஆச்சாரியா மற்றும் அஷ்ரித் பட்நாயக் ஆகியோர் பூரி ஜெகன்னாதருக்கு அமைச்சரவைப் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்துள்ளனர்.
நிகழ்ச்சிக்குப் பூரி ஜெகன்னாதர் வந்தாரா என்ற தகவல் இல்லை.
வடலூர் வள்ளலார் இராமலிங்க அடி களார் கூறியதுபோல, இது ஒரு பிள்ளை விளையாட்டல்லாமல் வேறு என்னவாம்?
இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா?
குளிர்காலத்தில் அவருக்குக் கம்பளி ஆடை போர்த்தியதுதான்.
ஒவ்வொரு நாளும் டாக்டர் ஒருவர் போய் பூரி ஜெகன்னாதருக்கு ‘ெஹல்த்‘ செக்–அப் செய்கிறார்.
சர்வ சக்தி வாய்ந்த கடவுளுக்குச் சாதாரண மனுசனுக்குத் தேவையானவை எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது.
டாக்டர் நாள்தோறும் மருத்துவ செக்–அப் செய்கிறாரே – அந்த மெடிக்கல் செக்–அப் ரிசல்ட் அறிக்கை வெளிவந்ததா? இரத்தக் கொதிப்பு எவ்வளவு? நீரிழிவு (சர்க்கரையின் அளவு) சாப்பாட்டுக்குமுன் (Fasting) எவ்வளவு இருந்தது? சாப்பாட்டுக்கு 2 மணிநேரத்திற்குப் பின் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருந்தது? என்றும் தெரிவிக்கப்படவில்லை.
தேவையான இன்ஜெக்சன், மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டனவா? அப்படி கொடுக்கப்பட்ட மாத்திரைகள் என்னென்ன என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை.
இன்னொரு செய்தி தெரியுமா?
அந்தப் பூரி ஜெகன்னாதர் கோவில் எப்படி வந்தது, தெரியுமா?
பூரி ஜெகன்னாதர் ஆலயம் பழங்காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது.
இதைச் சொன்னவர் யார் என்று தெரியுமா?
சொன்னால், ஆச்சரியப்படுவீர்கள்?
சொன்னவர் ஹிந்துத்துவாவாதிகள் தூக்கிச் சுமக்கும் சுவாமி விவேகானந்தர்தான்!
ஆதாரம் வேண்டுமா?
நூல்: ‘‘இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே, வருக!
மற்றொரு செய்தி –
‘‘பூரி ஜெகன்னாதருக்கு மனைவி தேவை’’ என்ற விளம்பரம்!
No comments:
Post a Comment