தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 10, 2024

தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே வாழ்த்து

featured image

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை சுத்பாட் ஆகியோர் டில்லி சென்றனர். அங்கு நேற்று (9.6.2024) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்தியாவில் முதல் நீர் மின் நிலையம்
நீரின் இயக்க ஆற்றலை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகும். இந்த முறை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது எந்தவித தீங்கு விளைவிக்கும் கழிவுகளோ, வாயுக்களோ வெளிப்படுவதில்லை. இதனால் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறைகளில் இதன் பங்கும் முக்கியமானது.
130 கிலோவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்தியாவின் முதல் நீர்மின் நிலையமானது, 1897ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் செயல்படத் தொடங்கியது. இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவிலேயே இதுதான் முதல் நீர்மின் நிலையமாகவும் இருந்தது. பின்பு கருநாடகாவின் காவிரி ஆற்றில் சிவசமுத்திரம் அருவிக்கு அருகே 4.5 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் நிலையம் அமைக்கப்பட் டது. 1902ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நீர்மின்நிலையம், இந்தியாவின் முதல் மிகப்பெரிய மின்நிலையமாக விளங்கியது. இது அமெரிக்காவில் செயல்படும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. இதில் தயாரிக்கப்படும் பெரும்பாலான மின்சாரம், அதன் அருகே அமைந்துள்ள கோலார் தங்கச்சுரங்கங்களுக்காகவே பயன்பட்டது.

No comments:

Post a Comment