கல்வி முறையில் மாற்றம் வருமா? பள்ளி திறந்த முதல் நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 11, 2024

கல்வி முறையில் மாற்றம் வருமா? பள்ளி திறந்த முதல் நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை!

featured image

கரூர், ஜூன் 11- பள்ளி திறந்த முதல் நாளிலே வெவ்வேறு இடங்களில் 3 மாணவர்கள் தற்கொலை செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.

தேர்வில் தோல்வி
கரூர் மாவட்டம், குளித் தலை அருகே உள்ள கருங்லாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மகேந்திரன் (வயது 16). ‘இவர் கோமாளிபாறையில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் 9 ஆம் வகுப்பு முழுத் தேர்வு முடிவில் தேர்ச்சி ஆகா மல் தோல்வி அடைந்துள் ளார். இதனால் மகேந்திரன் மனமுடைந்து காணப்பட் டார்.
இந்த நிலையில் பள்ளி திறப்பு நாளான நேற்று பள் ளிக்கு செல்லாமல் மகேந்தி ரன் வீட்டிலேயே இருந்துள் ளார். அவரது பெற்றோர் குளித்தலை அருகே உள்ள ஒரு கோவில் குடமுழுக்கிற்குச் சென்றுள்ளனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த மகேந்திரன் இரும்பு விட்டத்தில் கயிற்றால் தூக்கில் தொங்கினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மகேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர். அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

கடலூர், வேலூர்
கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் அருகே எண்ணாநகரம் கரைமேடு பகுதியை சேர்ந்த வர் சுபாஷ். இவரது மகள் கீர்த்தி (வயது15). கீர்த்தி பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பினும் மேற்கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. படிக்க ஆர்வம் இல்லாமல் இருந்து வந் துள்ளது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரி வித்தபோதிலும், அவர்கள் 10ஆம் வகுப்பு மட்டும் படித்துவிடு என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று (10.6.2024) பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கீர்த்தி பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதை யடுத்து கீர்த்தியை பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் கூறியதாகத் தெரிகிறது. இதில் மனமுடைந்த கீர்த்தி மதியம் வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் பழனி, லாரி ஓட்டுநர். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 மகன்கள். ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் கிருத்திக் (வயது 12) காந்திநகரில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று நேற்று 8 ஆம் வகுப்புக்கு சென்றான். பள்ளிக்கு முதல் நாள் செல்லும் போது புதிய புத்தகப்பை வாங்கித் தருமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளான். அதற்கு அவர்கள் பின்னர் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். நேற்று மாலை பள்ளிமுடித்து வீட்டிற்கு வந்த கிருத்திக் தாயாரிடம் புதிய புத்தகப்பை வாங்கித் தர கேட்டுள்ளார். அதற்கு அவர் வேலைக்கு சென்றுள்ள தந்தை வந்தபின் வாங்கித் தருகிறேன் என கூறி விட்டு மேய்ச்சலுக்குச்சென்ற மாடுகளை அழைத்து வர சென்றார்.
சற்று நேரம் கழித்து மாடு களை வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டில் ரேகா பார்த்த போது, வீட்டின் கூரையில் சேலையால் கிருத்திக் தூக்கிட்ட நிலையில் இருந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் கிருத்திக் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment