கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா
நியூஜெர்சி, ஜூன் 10 அமெரிக்கா நியுஜெர்சி மாநிலத்தில் கலைஞர் அறக்கட்டளை – அமெரிக்கா, பெரியார் பன்னாட்டு அமைப்புகளின் சார்பில் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு, 101ஆவது பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாட்டில் பாசிச சக்திகளை வீழ்த்தி 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த – 91 வயதிலும் தமிழ்நாடு முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றிக்கு வழி வகுத்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கும், உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கையான திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் தி.மு.க. தலைவர் தளபதியார் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை கலைஞர் அறக்கட்டளை யின் அமெரிக்க இயக்குநர் நியுஜெர்சி பாலா அவர்கள் ஒருங்கிணைத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் – பினதங்கிய மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளைக் குறித்து திருவள்ளுவர் தமிழ் நூலகத் தலைவர் தீபாபிரியா பெரியசாமி அவர்களும், விவசாயிகளுக்கு செய்த சாதனைகளை பற்றி டெலவேர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் கோபி கதிர்வேல் அவர்களும், எழுத்தாளராக கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளை பற்றி பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ம.வீ.கனிமொழி அவர்களும் உரையாற்றினார்கள்.
திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தமிழ்நாட்டில் கலைஞர் அவர்களால் பயன் பெறாத குடும்பங்களே இருக்க முடியாது என்றும் நூற்றாண்டின் சாதனையாளர் கலைஞர் என்றும் அந்த சாதனைகளை திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் தி.மு.க. தலைவர் தளபதியார் அவர்கள் தொடர்ந்து செய்வதையும் பாராட்டி உரையாற்றினார்.
இறுதியாக தமிழ்நாட்டில் பாசிச சக்திகளை வீழ்த்தி 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் தி.மு.க. தலைவர் தளபதியார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் இளமாறன், பிரபு சிவகுருநாதன், செந்தில்நாதன், பிராசத் பாண்டியன்,ரியாஸ்,பிரபு ரங்கராஜூ, எழில், அறிவுப்பொன்னி, கிருத்திகா, ஹர்சினி, மயிலை பாலா, சுபாஷ், சந்துரு, ஆதவன், குழலினி, இலக்கியா, இனியா, இலக்கணன், எய்னி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment