புதுடில்லி, ஜூன் 10- பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில், அஜித்பவார் – தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி ஒன்று அளிக்க பாரதீய ஜனதா முன்வந்தது. அப்பத வியை அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல் படேலுக்கு ஒதுக்க விருப்பம் தெரிவித்தது.
ஆனால், அதை பிரபுல் படேல் ஏற்க மறுத்து விட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- நான் ஏற்கெனவே கேபினட் அமைச்சர் பொறுப்பில் இருந்தவன். எனவே, இணை அமைச்சர் பதவி யில் அமர்வது எனக்குப் பதவி இறக்கம்போல் ஆகிவிடும்.இதை பாரதீய ஜனதா தலைமையிடம் தெரிவித்துவிட்டோம். மாற்று நட வடிக்கைகள் எடுக்கப்படும்வரை சில நாள்கள் காத்திருக்குமாறு பாரதீய ஜனதா சொல்லியுள்ளது.-இவ்வாறு அவர் கூறினார். அதே சமயத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அதிருப்தியில் உள்ள பிரபுல் படேலை சமாதானப்படுத்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசினார். தேசியவாத உறுப்பினரும், மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரும் உள்ளனர்.
Monday, June 10, 2024
அமைச்சரவையில் இடம் பெற அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் மறுப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment