மோடியின் காலில் விழுவதா? நிதிஷ் குமாரைக் கண்டித்த பிரசாந்த் கிஷோர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

மோடியின் காலில் விழுவதா? நிதிஷ் குமாரைக் கண்டித்த பிரசாந்த் கிஷோர்

featured image

பட்னா, ஜூன் 16- ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகாரை அவமானப்படுத்தியுள்ளதாக அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமர்சித் துள்ளார்.

ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம், பாகல்பூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
“நிதிஷ்குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான் இப் போது அவரை ஏன் விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட் கிறார்கள்.
அப்போது அவர் வித்தி யாசமான மனிதர். அவரது மனசாட்சியை விற்பனைக்கு வைக்கவில்லை. ஒரு மாநி லத்தின் தலைவர், அதன் மக்களின் பெருமை.
ஆனால், பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து நிதிஷ்குமார் பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தினார்.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் நிதிஷ் குமார் முக்கிய பங்கு வகிப்பதாக பலரும் பேசு கிறார்கள்.
ஆனால் பீகார் முதல மைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்? அவர் தனது செல்வாக்கை மாநிலத்துக்கான நன்மை களை உறுதிப்படுத்த பயன் படுத்தவில்லை.

2025 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகும், பாஜக ஆதரவுடன் தான் ஆட்சியில் நீடிப்பதை உறுதிசெய்ய அவர் பிரதமர் மோடியின் கால்களைத் தொடுகிறார்.’ இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.

No comments:

Post a Comment