மூடனும் மூர்க்கனும் கொண்டது விடான் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேறுமாம் மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லையாம் இதற்குப் பெயர்தான் பிஜேபி அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

மூடனும் மூர்க்கனும் கொண்டது விடான் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேறுமாம் மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லையாம் இதற்குப் பெயர்தான் பிஜேபி அரசு

ஒன்றிய அமைச்சரவையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த நிலையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் வென்ற பாஜக பல்வேறு சட்டத்திட்டங்களை அமல்படுத்தி வந்தது. இந்த முறை கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் மேலும் சட்டத்தில் பல மாற்றங்களை செய்யும் முனைப்பில் ஒன்றிய அரசு உள்ளது. அந்த வகையில் பதவியேற்ற 100 நாட்களுக்குள் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மேனாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இதை சட்டமாக்க ஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த 18 அரசியல் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்றும், இதற்கு மாநில சட்டமன்றங்களின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமிருக்காது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment