உலக சுற்றுச்சூழல் நாள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு கண்காட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

உலக சுற்றுச்சூழல் நாள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு கண்காட்சி

featured image

சென்னை, ஜூன் 6- உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி மாணவர்களால் வரையப்பட்ட வண்ணக் கோலங்கள், விழிப்புணர்வு கண்காட்சியை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
பின்னர் அவர், மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

இலக்கை அடைய முடியும்
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பசுமை பரப்பு 23.7 சதவீதமாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10ஆண்டுகளில் இதனை 25 சதவீதமாக உயர்த்துவோம் என கூறினோம். ஏழரை லட்சம் எக்டேர் பசுமை பரப்பில் பசுமை மரங்கள் நட்டால் தான் 25 சதவீத பசுமை பரப்பு இலக்கை அடைய முடியும். 2022 – 2023-ஆம் ஆண்டில் மட்டும் 2.8 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. இன்னும் 10 ஆண்டுகளில் 260கோடி மரங்கள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 260 கோடி மரங்கள் எங்கெங்கே நடப்படும் என்ற திட்டமிடுதலும் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதிகளவு பசுமை பரப்பு
இதன்மூலம், இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே தமிழ்நாட்டில் அதிகளவில் பசுமை பரப்பு இருக்கிறது என்ற நிலையை நம்மால் ஏற்படுத்திட முடியும்.
-இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment