புதுடில்லி, ஜூன் 7 குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் ஆணையர் கள் சந்தித்து பட்டியலை ஒப்படைத்தனர்
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் கட்சி வாரியாக எந்த கட்சிகளுக்கு எவ்வளவு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், எவ்வளவு எண்ணிக்கை உள்ளது என்பது குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலை குடியரசு தலைவரிடம் தேர்தல் ஆணையர்கள் வழங்கினர்
ஒன்றிய அமைச்சரவை பரிந்துரைப்படி, 17ஆவது மக்களவையை கலைத்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனை தொடர்ந்து 18ஆவது மக்களவை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டி யல், எந்தெந்த கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் என்பது குறித்த பட்டி யலை குடியரசு தலைவருக்கு வழங்க வேண்டும். பட்டியலை அடிப்படையாக கொண்டு 18ஆவது மக்களவை, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை குடியரசு தலைவர் தொடங்குவார். அதன் அடிப்படை விதி முறைகளின்படி இந்தப் படியலை ஒப்படைத்தனர்
குடியரசு தலைவர் 18ஆவது மக்க ளவை பணிகளை தொடங்குவதோடு எந்தக் கட்சிக்கு அதிக உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கிறதோ அந்த கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட கட்சியும் குடியரசு தலைவரை சந்தித்து உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்று ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும். இரண்டு பட்டியலையும் குடியரசு தலைவர் சரிபார்த்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று முடிவு செய்யும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுப்பார். இத்தகைய நடைமுறை இன்று (7.6.2024) நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment