சென்னை, ஜூன் 5– ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை 32 தொகுதிகளில் போட்டி யிட்டு ஓர் இடம் கூட கிடைக்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
44 சதவீத வாக்குகள்
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தல் தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்த கடைசி நாடாளுமன்ற தேர்தல் ஆகும். அந்த தேர்தலில் ‘இந்த லேடியா? அல்லது மோடியா?” என்ற அவரது பிரச்சார முழக்கம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. அதோடு 44 சதவீத வாக்குகள் பெற்று சாதனை படைத்தது.
அதன்பின் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. சந்தித்த 2019 மற்றும் தற்போதைய 2024ஆம் ஆகிய 2 நாடாளு மன்ற தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
குறைந்தபட்ச வாக்கு சதவீதம்
கடந்த 2019ஆம் ஆண்டு தேர் தலில் அ.தி.மு.க பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., பா.ஜனதா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளை இணைத்து தேர்தலை சந்தித்தது. அதில் அதிமு.க 20 இடங்களில் போட்டியிட்டு தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 19.39 சதவீத வாக்குகள் தான் கிடைத்தது. இதுதான் அ.தி.மு.க. வரலாற்றில் அந்த கட்சிக்குக் கிடைத்த குறைந்தபட்ச வாக்கு சதவீதம் ஆகும்.
அதே போல் இந்த தேர்தலில் அ.தி.முக., தே.மு.தி.க. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. மொத்தம் 32 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சியால் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
No comments:
Post a Comment