கன்னியாகுமரி, ஜூன் 16- கன்னியாகுமரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சு போட்டி செண் பகராமன்புதூரில் உள்ள எம்.இ.டி. பொறியியல் கல்லூரியில் “பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் ஒரு தொலைநோக்காளர் பெரியார் அறிவியல் பார்வையும் அணுகுமுறையும் ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி செயல் அதிகாரி கோ.மகாதேவன் தலைமையில் நடைபெற்றது. கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு ஆகியோர் பங்கேற்று பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். திராவிடர்கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன் ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் எழில் தினேகா கல்வியியல் கல் லூரி முதல்வர் சிறீலதா ஆகியோர் போட்டியினை ஒருங்கிணைத்தனர். 170க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்றனர். பங் கேற்றவர்கள் சுயமரியாதை இயக்க வரலாறு குறித்தும், பெரியாருடைய தொண்டுகள் மற்றும் வரலாறு குறித்தும் நிறைய செய்திகளை அறிந்துகொண்டனர்.
மாணவியர்கள் இசைவாணி முதல் பரிசும் (3 ஆவது ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்) யோகேஸ்வரி இரண்டாம் பரிசும் (இரண்டாம் ஆண்டு இ.சி.இ). நேசப்பிரியா மூன்றாம் பரிசும் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்) பரிசு பெற்றனர். பரிசு பெற்ற மாணவியர்களை அனைவரும் வாழ்த்தினர்.
No comments:
Post a Comment