கொல்கத்தா, ஜூன் 12 ‘மேற்கு வங்கத்திலிருந்து தோ்வான 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடா்பில் உள்ளனா். எனவே, நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் விரைவில் குறையும்’ என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சாக்கேட் கோகுலே நேற்று (11.6.2024) கூறினார்.
மேற்கு வங்கத்தில் மொத்த முள்ள 42 மக்களவைத் தொகுதி களில் திரிணமூல் காங்கிரஸ் 29 இடங்களில் வெற்றிபெற்றது. அதே நேரம், கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக இந்த முறை பின்னடைவைச் சந்தித்தது. இம்முறை 12 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது. இவா்களில் 3 போ் திரிணாமூல் காங்கிரஸுக்கு வரவுள்ளதாக சாக்கேட் தெரிவித்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில்,
‘மக்களவையில் பாஜக தற்போது 240 எம்.பி.க்களைக் கொண்டுள்ளது. இவா்களில் மேற்கு வங்கத்திலிருந்து தோ்வான 3 போ் எங்களது கட்சியினர் அவர்கள் தேர்தல் நேரத்தில் பாஜகவுடன் போய் இணைந்துள்ளனர். தற்போது அவர்கள் திரிணாமூல் காங்கிர ஸுடன் தொடா்பில் உள்ளனா். எனவே, பாஜகவின் பலம் விரைவில் 237-ஆகக் குறைய உள்ளது. பிரதமா் மோடியின் கூட்டணி தற்காலிகமான கட்ட மைப்பைப் போன்றது. நீண்ட நாள் நிலைத்திருக்காது’ என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment