தமிழ்நாடு அரசின் ஊதியம் வாங்கிக் கொண்டு ஒன்றிய அரசுக்கும், அதன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஆளு நருக்கும் விசுவாசமாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் நடந்து கொள்கிறார்களா என்ற அய்யம் எழுவதில் வியப்பில்லை.
இன்று ஜூன் 16-ஆம் தேதி தமிழ்நாட்டில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவைப் போற்றும் முக்கிய நாளாகும். திருச்சி கோட்டையில் ஜம்புத் தீவு பிரகடனம் வெளியிடப்பட்ட நாளாகும். இதனைக் கொண்டாடி, இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. போராளி களை நினைவு கூர்வது வர வேற்கத்தக்கதே!
ஆனால் வெள்ளையர் ஆதிக் கத்துக்கு அடிபணிய முடியாது என்று அறிவித்த அந்த அறிவிப்புக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஒருங்கிணைந்த “பாரத” சிந்தனைக்கும் என்ன தொடர்பு?
பதிவாளர் கையொப்பமிட்டு 7.6.2024 அன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்திய விடு தலைப் போர் என்று இத்தனை நாள் அடை யாளப்படுத்தி வந்த இடத்தில், பாரதம், பாரதம் என்று ஆர்.எஸ்.எஸ். பல்லவி பாட வேண் டிய அவசியம் என்ன?
ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் இந்த மண்ணுக்கு ஏற்புடையதல்ல என்று மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்திருப்பதை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசிடம் விரோதப் போக்குடன் நடந்து கொள்ள ஆள் பிடிக்கும் ஆளுநரின் போக்குக்கு ஆட்பட வேண்டாம் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment