விருதுநகர், ஜூன் 13- விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் உள்ள மாசானம் சுவாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பெண்கள் கலந்து கொள்வதில்லையாம்.
கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றதாம். இதில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக கோவிலுக்கு செலுத்திய 100-க்கும் மேற்பட்ட ஆடுகள், சேவல்கள் பலியிடப்பட்டன. பின்னர் அசைவ உணவு சமைக்கப்பட்டது.
அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் உணவுக்கொடை நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு கறி விருந்தைருசித்தனர்.
அதுமட்டுமின்றி உணவுக் கொடை முடிந்து மீதமுள்ள சோறு, கறி ஆகியவற்றை கோவில் எல்லயை அடுத்து எடுத்துச்செல்ல அனுமதியில்லையாம். ஆதலால் மீதமிருந்த உணவை பெரிய பள்ளத்தில் போட்டு புதைத்தனர்.
இந்த விழாவில் மதுரை, விருது நகர், சிவகங்கை, கோவை, சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள்் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment