மதுரை, ஜூன் 14- தனி நீதிபதி உத்தரவை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும், பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் உணவுக் கொடை நடை பெற்று வருகிறது. அந்த நாளில் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இந்த நடைமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக இந்த நடைமுறை நடைபெறா மல் இருந்து வந்தது.
எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனு மதி அளிக்கவேண்டும் என்று கோரி கரூர் நவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், இந்த எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சனம் செய்யும் நிகழ்வை நடத்திக் கொள்ளலாம் என கடந்த மே 17ஆம் தேதி தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து, மே 18 ஆம் தேதியன்று, நெரூரில் பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட்ட இலைகளில் அங்கபிரதட்சணம் செய்த னர். எச்சில் இலையில் உருண்டு நேர்த்திக்கடன் செய்வதை உயர் நீதிமன்றமே அங்கீகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களை இழிவு செய்யும் இந்த நிகழ்வுக்கு நீதிமன்றம் துணை போவதா என விமர்சனங்கள் எழுந்தன. எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து கரூர் ஆட்சியர் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
கடந்த 2015 முதல் தற்போது வரை பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிர தட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. பழைய உத்தரவுகளை மறைத்து, தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்றுவிட்டனர் என அரசு தரப்பு தெரிவித்துள் ளது. இதையடுத்து, நெரூர் சத்குரு சதாசிவா பிரம் மேந்திராள் சபா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விரிவான விசாரணைக் காக வழக்கை வரும் ஜூன் 25ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்தது.
No comments:
Post a Comment