‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு சி.பி.அய். விசாரணை நடத்த பொது நல மனு தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு சி.பி.அய். விசாரணை நடத்த பொது நல மனு தாக்கல்

புதுடில்லி, ஜூன் 15 நீட் முறைகேடு தொடா்பாக சிபிஅய் விசாரணை மேற்கொள்வது குறித்து ஒன்றிய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததாகவும் அந்த தோ்வில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை யடுத்து, இந்த முறைகேடுகள் தொடா்பாக சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என ஹித்தன் சிங் காஷ்யப் என்பவா் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு நேற்று (14.6.2024) விசாரித்தது. அப்போது,‘சிபிஅய் விசாரணை நடத்துவது குறித்து ஒன்றிய அரசும், என்டிஏவும் பதிலளிக்க வேண்டும்.

அதேபோல், இந்த விவகாரம் தொடா்பாக சிபிஅய் மற்றும் பீகார் அரசும் இரண்டு வாரங்க ளில் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

ஒருங்கிணைந்த விசாரணை: நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஒருங்கிணைத்து ஒன்றாக விசாரிக்குமாறு உச்சநீதி மன்றத்தில் தேசிய தோ்வு முகமை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த இதே அமா்வு, இதுதொடா்பாக பல்வேறு உயா்நீதி மன்றங்களில் மனு தாக்கல் செய்தவா்கள் பதிலளிக்குமாறும், பிற மனுக்கள் மீது ஜூலை 8-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதா கவும், அவா்களில் மறுதோ்வை எழுத விரும்பும் மாணவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி தோ்வு நடத்தப்படவுள்ளதாகவும் ஒன்றிய அரசு 13.6.2024 அன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. மறுதோ்வை எழுத விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி அவா்கள் பெற்ற மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment