சிறீநகர், ஜூன் 15 ஜம்மு-காஷ்மீரின் மக்டி கிராமத்தில் எல்லைத் தாண்டி 10 கிலோ அளவிலான ஹெராயின் என்னும் போதைப் பொருள் கடத்தலை தடுக்க உதவிய கிராம மக்கள் 5 பேருக்கு காவல் துறையினர் சன்மானம் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் காவல் துறை தரப்பில் கூறுகையில், “போதைப் பொருள் கடத்தலை தடுத்த கிராம மக்கள் 5 பேரின் வீரம், தேசபக்தி இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையகம் அவர்களுக்கு ரூ. 4 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கியுள்ளது.
அந்த 5 பேரும் ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா செக்டரில் உள்ள மக்டி கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் ஊடுருவல் எதிர்ப்பு தடை அமைப்பிற்கு முன்னால் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் தங்களது பாதுகாப்பையும் பொருட் படுத்தாமல் ஏப்ரல் மாதம் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களை தடுத்து நிறுத்தி, 9.94 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், எல்லை தாண்டி போதைப்பொருள் கடத்த லில் ஈடுபட்ட மற்றவர்களைக் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.
No comments:
Post a Comment