நீட் தேர்வில் உள்ள குளறுபடிகளை கண்டித்து சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

நீட் தேர்வில் உள்ள குளறுபடிகளை கண்டித்து சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

6-23

பல்லாவரம், ஜூன் 15- நீட் தேர்வில் உள்ள குளறுபடிகளை கண்டித்து சமூகநீதி மாணவர் இயக்கம் சென்னை மண்டலம் சார்பாக நேற்று 14.06.2024 மாலை 5.00 மணிக்கு பல்லாவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மண்டல செயலாளர் Y.ஜெயினுல்லாபுதீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் தமீம் அன்சாரி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே. ஜாஹிர் உசேன், திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ச. ஜெப்ரி, மாநில திராவிடர் தொழிலாளர் கழகப் பொறுப்பாளர் கூடுவாஞ்சேரி மா. இராசு, சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் விடுதலைநகர் பி.சி.ஜெயராமன், ஆவடி மாவட்ட கழகத் துணைச் செயலாளர் க.தமிழ்ச் செல்வன்,தென் சென்னை மாவட்ட கழகத் துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், படப்பை சந்திரசேகர், தனசேகர் மற்றும் நிழற்படக் கலைஞர்கள் சதீஷ், சுரேஷ் மற்றும் சமூகநீதி மாணவர் இயக்க சகோதரர்கள், மாணவர்கள், திராவிட மாணவர் கழகம், விடுதலை சிறுத்தைகள் மாணவ இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் மாணவ சகோதரர்கள் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் குல் முகமது நன்றி உரையாற்றினார்.

No comments:

Post a Comment