ஜெய்ப்பூர், ஜூன் 15 தனிப்பெரும் பான்மை பலமின்றி பாஜக ஆணவத்தால் வீழ்ந்தது என்று ஆர்எஸ்ஆஸ் மூத்த நிர்வாகி இந்தி ரேஷ் குமார் விமர்சனம் செய்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் பேசுகையில், ‘ராமரை வழிபட்டவர்கள் படிப்படியாக கர்வமடைந்தார்கள். அவர்களின் கட்சி (பாஜ) மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அவர்களுக்கு தேர்தலில் கிடைக்க வேண்டிய தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக அவர்களது கட்சிக்கு (பாஜ) 240 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அவர்களுக்கு கிடைக்கவேண்டிய தனிப்பெரும்பான்மை அவர்க ளின் ஆணவத்தால் தடுத்து நிறுத் தப்பட்டது. மேலும், ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு 234 இடங்கள் கிடைத்தன. அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை. ராமரின் நீதி உண்மையானது, மகிழ்ச்சி அளிக்கிறது. ராமர் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை, யாரையும் தண்டிப்பதில்லை. யாரையும் துன்புறுத்துவதில்லை. அனைவருக்கும் ராமர் நீதி வழங்கி உள்ளார்’ என்று கூறினார். ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உண்மையான சேவகனுக்கு ஈகோ இருக்காது என்று கூறியிருந்தார்.
கேரளாவில் ஆலோசனை: ஆர்எஸ்எஸ், பாஜ உள்ளிட்ட அதன் துணை அமைப்புகளுடனான மூன்று நாள் இந்த ஆண்டிற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இரு அமைப்புகள் இடையேயும் சமரசம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment