கழகச் சொற்பொழிவாளரும், சிதம்பரம் மாவட்ட கழக இணைச் செயலாளருமான யாழ்திலீபன் – இளமதி இணையரின் மகன் யாழ்வீரமணி மற்றும் பெ. தமிழ்செல்வம் – தனலட்சுமி இணையரின் மகள் த.ரஞ்சிதா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரை. கி.சரவணன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், மாவட்டக் கழக காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், மாவட்டக் கழகத் தலைவர் பூ.சி. இளங்கோவன், தலைமைக் கழக அமைப்பாளர் த.சீ. இளந்திரையன், கடலூர் துணை மேயர் தாமரை செல்வன் மற்றும் உறவினர்கள், கழகத் தோழர்கள் உள்ளனர். (10.6.2024)
கடலூர் வர்த்தகர் சங்கத்தின் சார்பாக விடுதலை சந்தா தொகை ரூ.20 ஆயிரத்தை கடலூர் வர்த்தகர்கள் சங்க தலைவர் துரைராஜ் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: ம.தி.மு.க. கொள்கை அணி விளக்க செயலாளர் ஆ.வந்தியத்தேவன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கடலூர் இள. புகழேந்தி, கடலூர் துணை மேயர் தாமரை செல்வன் மற்றும் தோழர்கள் உள்ளனர். தேசிங்ராஜன் – அருள்மொழி விடுதலை சந்தா தொகை ரூ.20 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (கடலூர் – 9.6.2024)
கடலூர் கழக மாவட்டத்தின் சார்பாக விடுதலை சந்தா தொகை ரூ.60 ஆயிரத்தை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (கடலூர் – 9.6.2024) விருத்தாசலம் மாவட்டத்தின் சார்பாக விடுதலை சந்தா தொகை ரூ.42 ஆயிரத்தை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (புவனகிரி – 9.6.2024)
No comments:
Post a Comment