புலம்பெயர்ந்து குவைத் நாட்டில் பணிபுரிய, தொழில் நடத்திட சென்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 49 பேரின் உயிரைப் பலிகொண்ட நிகழ்வு நெஞ்சை உலுக்குகிறது!
இந்திய நாட்டின் குடிமக்களில் பலரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்வர் உள்பட உயிரிழந்துள்ளதும், பலர் அபாய கட்டத்தில் உள்ளதும் மிகத் துயரமானதாகும்.
அவர்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் உடனடியாக தேவைப்படும் ஏற்பாடுகளையும், பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நமது இரங்கலையும், அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி,
சென்னை தலைவர்,
13.6.2024 திராவிடர் கழகம்
No comments:
Post a Comment