சிறீநகர், ஜூன் 16 – ஜம்மு-காஷ்மீா் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததிராய் மீது சட்டவிரோத செயல் பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க டில்லி துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்திருப்பதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
டில்லியில் கடந்த 2010ஆம் ஆண்டு, அக்டோபரில் ‘ஆசாதி – தி ஒன்லி வே’ என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அருந்ததி ராய், காஷ்மீா் மத்திய பல்கலைக்கழக மேனாள் பேராசிரியா் ஷேக் சவுகத் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.
காஷ்மீா் பிரிவினையை மய்யமாகக் கொண்டு இந்தக் கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றதாகக் கூறப்படு கிறது. இதுதொடா்பாக காஷ் மீரைச் சோ்ந்த சுஷீல் பண்டிட் என்பவர் டில்லி பெருநகர நீதிபதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்தப் புகாரின் அடிப் படையில் காவல் துறையில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை ரத்து செய்தது. இதையடுத்து, இக்கூட்டம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அருந்ததி ராய், ஷேக் சவுகத் ஹுசைன் ஆகியோரை யுஏபிஏ சட் டத்தின்கீழ் விசாரிக்க டில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்தார்.
துணைநிலை ஆளுந ரின் ஒப்புதலுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி, மக் கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடா்பாக தேசிய மாநாட்டுக் கட்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துரிமைக்கான ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையை நிலைநிறுத்த வேண்டியது அவசியம்.
யுஏபிஏ சட்டத்தின் கீழ் எழுத்தாளா் அருந்ததி ராய் மற்றும் டாக்டா் ஷேக் சவுகத் ஹுசைன் மீது வழக்கு தொடரப்பட்டதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். கருத்து வேறுபாடுகளை அடக்கு வதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவது கவலைக்குரியது.
சமீபத்தில் தோ்த லில் தோல்வியை எதிர்கொண் டாலும், பாஜக அரசின் கடுமையான நிலைப்பாடு மாறாது என்பதை எடுத் துரைப்பதைத் தவிர, இந்த வழக்கு வேறெந்த நோக் கத்துக்கும் உதவாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுஏபிஏ சட்டத்தின்கீழ் விசாரணைக்கு ஆளுநா் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியூட்டுவதாக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும் ஜம்மு-காஷ்மீா் மேனாள் முதலமைச்சருமான மெகபூபா முஃப்தி தெரி வித்துள்ளார்.
No comments:
Post a Comment