கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 12, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.6.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
*அதீத நம்பிக்கையில் பாஜக தேர்தலில் குறைந்த இடங்களைப் பெற்றது, ஆர்.எஸ்.எஸ். ஆர்கனைசர் தாக்கு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆந்திர பிரதேச தலைநகர் அமராவதி, சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.
* கூட்டணி ஆட்சி நடத்துவது மோடிக்கு புதிது; வெளிநாட்டு பிரமுகர்களை தவிர உள் நாட்டில் எவரிடமும், பிரதமர் மோடி சுமூகமாகப் போனதில்லை என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே.
* நீட் தேர்வில் தங்களுக்கு கடினமான மற்றும் மாறுபட்ட கேள்வித்தாள்கள் தரப்பட்டுள்ளது; அய்தராபாத் மாணவர்கள் நீதிமன்றத்தில் மனு செய்ய முடிவு.
* ஒடிசா மாநில முதலமைச்சராக பழங்குடி இனத்தைச் சேர்ந்த மோகன் சரண் மஞ்சி தேர்வு.
தி ஹிந்து:
* பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டங்கள் பாஜகவின் செயல்பாடு திட்டங்கள் என்கிறார் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்.
* வாரிசு அரசியல் என பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் தாக்குதல் நடத்தினார். ஆனால் தற்போது அவரது அமைச்சரவையில் பல கேபினட் அமைச்சர்கள் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என ராகுல் தாக்கு.
* பாஜகவின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் இருக்கும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டி யிட்டிருந்தால் மோடி தோற்று போயிருப்பார்: ராகுல் காந்தி விமர்சனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எச்.டி.குமாரசாமி கனரக மற்றும் உருக்குத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், விசாகப்பட்டினம் உள்ளிட்ட உருக்கு ஆலைகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக உறுதியளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை.

– குடந்தை கருணா

No comments:

Post a Comment