பழனி, ஜூன் 11- பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று (10.6.2024) நடைபெற்றது. மலைக்கோவில் மண்டபத்தில் நடந்த பணியில் வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணித்தபடி இருந்தனர். அப்போது காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் நைசாக பணம் திருடும் காட்சியை கேமரா மூலம் அதிகாரிகள் பார்த்துவிட்டனர். இதையடுத்து கோவில் அதிகாரிகள் உடனடியாக சென்று அந்த பெண்ணை சோதனை செய்தனர். அப்போது அவர் ரூ.80 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது.
விசாரணையில், அவர் பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் தற்காலிக பேராசிரியையாக பணியாற்றி வரும் மைதிலி என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து புகாரின் பேரில் காவல்துறையினர் மைதிலியை கைது செய்தனர்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர் பதவி எம்.ராஜாராம் நியமனம்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 11 தமிழ் நாடு மக்கள் நீதிமன்றத் தலைவராக ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராமை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மக்கள் நீதிமன்றத் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.தேவதாஸ் கடந்தாண்டு நியமிக்கப்பட்டிருந்தார். ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி நீதித்துறை உறுப்பினராகவும், அத்துடன் ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்குரைஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபடும்போது அவர்களை விசாரிக்கும் அமைப்பான மக்கள் நீதிமன்ற செயல்படுகிறது. இந்நிலையில் அதன் தலைவராக செயல்பட்டு வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தனது பதவியிலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து லோக் ஆயுக்தா சட்டம் 2018இன் படி, பதவி விலகல் அல்லது இறப்பு உள்ளிட்ட காரணமாக தலைவர் பதவியில் காலியிடங்கள் ஏற்பட்டால் அதற்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை அக்குழுவின் மூத்த உறுப்பினர் தலைவராக செயல்படலாம். அதன்படி லோக் ஆயுக்தா அமைப்பின் மூத்த உறுப்பினர் ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம் தலைவராக செயல்படுவார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒன்றிய அமைச்சா் பதவி?
மேலும் சில நாள்கள் காத்திருக்க
அஜீத் பவாா் கட்சி முடிவாம்!
மும்பை, ஜூன் 11- ஒன்றிய அமைச்சரவையில் பாஜக அளிக்க முன்வந்த இணையமைச்சா் பதவியை ஏற்க மறுத்துவிட்ட அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, கேபினட் அமைச்சா் பதவி கிடைக்குமா? என்பதை அறிய மேலும் சில நாள்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளது.
மக்களவைத் தோ்தலில் அக்கட்சி ஓரிடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால், அக்கட்சிக்கு ஒன்றிய அமைச்சரவையில் ஒரு இணையமைச்சா் பதவி மட்டுமே வழங்க பாஜக முன்வந்தது.ஆனால், இதனை ஏற்க மறுத்த அஜீத் பவாா் தரப்பு கேபினட் அமைச்சா் பதவி வேண்டுமென்று கோரியுள்ளது. இது தொடா்பாக அஜீத் பவாா் கூறுகையில், ‘இப்போது எங்கள் கட்சிக்கு மக்களவை, மாநிலங்களவையில் தலா ஒரு உறுப்பினர் மட்டுமே உள்ளனா். ஆனால், அடுத்த சில மாதங்களில் நடைபெறும் மாநிலங்களவைத் தோ்தலுக்குப் பிறகு கூடுதலாக 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைப்பாா்கள் என்றாா் அஜீத் பவாா்.
No comments:
Post a Comment