கோவைக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

கோவைக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு

13-13

கோவை, ஜூன் 13- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் ம.சந்திர சேகர் தலைமையில் காம ராஜ் நகர் கன்ணப்பன் அரங்கில் 12-06-2024 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபா கரன், மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன், மாவட்ட ப.க.செயலாளர் அக்ரி நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்திற்கு பகுதி செய லாளர் தெ.குமரேசன் வரவேற்புரையாற்றினார்

கூட்டத்தில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலை நாளிதழுக்கு கோவையில் அதிக அளவு சந்தா சேகரிப்பு குறித்தும், கோவை மாவட் டத்தில் அனைத்து பகு திகளிலும் விடுதலை நாளிதழை கொண்டு சேர்ப்பது குறித்தும் கழகத் தோழர்கள் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.

மாவட்ட துணைத் தலைவர் மு.தமிழ்செல்வம், போத்தனூர் வெங்கடேஷ், மதியரசு, பிரகாஷ், இருதய ராஜ், ஆட்டோ சக்தி, மே.ப.ரங்க சாமி மற்றும் ஜி.டி.நாயுடு நினைவு பெரி யார் படிப்பக காப்பாளர் அ.மு.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக பீளமேடு பகுதி செயலாளர் மா.ரமேசு நன்றியுரை கூறினார்.

கூட்டத்தில், நடை பெற்ற முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40/40 இடங்கள் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு, தமிழ்நாடு முழுவதும் புரப் புரை மேற்கொண்டு மக்க ளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டு தலையும் தெரிவித்துக் கொள்வதோடு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் இக் கமிட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது எனவும்,
கோவைக்கு வருகை தர உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சியுடன் சிறப்பான வரவேற்பு வழங்குவது என இக்கமிட்டி முடிவு செய்கிறது எனவும்,

கோவையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளிடம் மாவட்ட கழகம் சார்பில் பெருமளவில் விடுதலை சந்தாக்களை வழங்குவது என இக்கமிட்டி தீர்மானிக்கிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment