ராமன் கோயில் திறக்கப்பட்ட அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பிஜேபி தோல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

ராமன் கோயில் திறக்கப்பட்ட அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பிஜேபி தோல்வி

featured image

அயோத்தியில் மோடி திறந்து வைத்த ராமன் கோவில் அடங்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக வேட்பாளர் லாலு சிங்கை விட சுமார் 47 ஆயிரம் வாக்குகள் முன்னிலையுடன் சமாஜ்வாடி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார்
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ராமன் கோயில் கட்டப்பட்டது. இதன் பிரான பிரதிஷ்டை விழா என்று கடந்த ஜனவரியில் நடைபெற்றது.

மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ராமன் கோயில் கனவு நிறைவேறியதால் பா.ஜ.,விற்கு ஆதரவு பெருகியுள்ளதாகக் கூறப்பட்டது. இது இந்த மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று (4.6.2024) வெளியான தேர்தல் முடிவில், உ.பி.,யில் பாதிக்கும் மேலான தொகுதியில் பா.ஜ., தோல்வியடைந்தது. குறிப்பாக, அயோத்தியின் ராமன் கோயில் அடங்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ., வெற்றி பெறும் என கணித்த நிலையில், அங்கு சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment