கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.6.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
* நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 73 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
*திமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய திட்டங்களை தேர்தல் பிரச்சார கூட்டங்களில் எடுத்துரைத்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு
* ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12ஆம் தேதி பதவி ஏற்பார்.
* மோடி தலைமையிலான என்.டி.ஏ. அணிக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு. மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற வலியுறுத்தல்.
* இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் எதிர்கட்சியாக அமர முடிவு.
* கூட்டணி ஆட்சி அமைக்கிறது பாஜக: 8ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி: தே.ஜ. கூட்டணி கூட்டத்தில் முடிவு. சபாநாயகர் பதவி, முக்கிய இலாகா கேட்டு சந்திரபாபு, நிதிஷ் போட்டா போட்டி: ஆட்சி அமைக்கும் முன்பே கதிகலங்கும் பாஜக.
* தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிக்கை, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஜூலையில் பெற்று நடவடிக்கை, அமைச்சர் தகவல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
< பாஜகவின் முக்கிய திட்டங்களுக்கு கடினமான பாதை - ஒரு தேர்தல் அழுத்தம் முதல் தொகுதி மறுவரையறை நிர்ணயம் வரை; “சமூகத் துறையாக இருந்தாலும் சரி, பொருளாதாரத் துறையாக இருந்தாலும் சரி, கூட்டணி ஆட்சியில் கடுமையான சீர்திருத்தக் கொள்கைகளுக்கு இடமில்லை என்கிறார் கட்டுரையாளர் லிஸ் மாத்தியூ. < குறைந்த பட்சம், இந்த முடிவு பிரதமர் மோடியின் அதிகார குமிழியையாவது குத்தி விடுகிறது. இந்தத் தேர்தலை அவர் தன்னைப் பற்றியே உருவாக்கினார். ஆனால் இன்று, அவர் மற்றொரு அரசியல்வாதி என மக்களால் பார்க்கப்படுகிறார். மூச்சுத் திணறல் நிழலாடியது, சமநிலை திரும்பியது. 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதாப் பானு மேத்தா நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
< பாஜக, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் மேற்கு வங்கத்தில் தங்கள் முழு முயற்சியையும் அளித்த போதிலும் தேர்தல் கணிப்புகளை பொய்யாக்கி, வங்காளத்தை மீண்டும் தன்னுடையது என்று மம்தா நிரூபித்துள்ளார். < டில்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் சந்திப்பு. தென் மாநிலங்களுக்காக வாதாடி, நமது உரிமைகளை பாதுகாப்பார் என நம்புகிறேன் என எக்ஸ் தளத்தில் பதிவு. < தேர்தல் 2024: ஜார்க்கண்டில் உள்ள அய்ந்து பழங்குடியின தொகுதிகளையும் பாஜக இழந்தது. < 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ளபோது திமுக மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தி இந்து
< மோடி காரணி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தேக்கமடைந்துள்ளது - சிஎஸ்டிஎஸ் அறிக்கை. < டில்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தை அஜித் பவார் புறக்கணித்ததை அடுத்து, மகாராட்டிராவின் ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. < ஒன்றியத்தில் பிஜேபியை சமன்படுத்தும் பிஜேடியின் தந்திரம் அதன் வீழ்ச்சியை விளைவித்தது < உத்தரபிரதேசத்தில் பாஜகவின் டபுள் இன்ஜின் சர்க்கார் என்ற இரட்டை இயந்திரத்தை அகிலேஷ் முறியடித்தார் தி டெலிகிராப்
< பரிதாபாத் - அயோத்தி பொதுத் தொகுதியில் நின்ற சமாஜ்வாதி கட்சியின் தாழ்த்தப்பட்டோர் வேட்பாளர் அவதேஷ் பிரசாத் மாபெரும் வெற்றி. < "தேசிய ஜனநாயகக் கூட்டணி நடுங்கும் நிலையில் உள்ளது என்பதை மக்கள் தீர்ப்பு நிரூபித்துள்ளது" என்று திருணாமுல் எம்.பி. அபிஷேக் பேட்டி. டைம்ஸ் ஆப் இந்தியா
< சமாஜ்வாதி கட்சி சார்பில் வெற்றி பெற்ற 86% எம்பிக்கள் ஓபிசிக்கள், தலித் மக்கள், முஸ்லிம்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில், 37 எம்.பி.க்களில் ஓபிசியிலிருந்து 20 பேரும், எஸ்சியிலிருந்து எட்டு பேரும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேரும் அடங்குவர். < 2019இல் வெற்றி பெற்றதை விட 2024இல் ரிசர்வ் மக்களவைத் தொகுதிகளில் பாஜக 25 சதவீத இழப்பை சந்தித்துள்ளது.

– குடந்தை கருணா

No comments:

Post a Comment