கோயம்புத்தூர், ஜூன் 12- கோடக் மஹிந்திரா அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி லிமிடெட் ‘கோடக் மியூச்சுவல் ஃபண்ட்’ சிறப்புச் சூழ்நிலைகள் கருப்பொருளைத் தொடர்ந்து, திறந்தநிலை ஈக்விட்டி திட்டமான கோடக் சிறப்பு வாய்ப்புகள் நிதியினை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இந்தத் திட்டம் ஜூன் 10, 2024 அன்று பொதுச் சந்தாவுக்குத் திறக்கப் பட்டு ஜூன் 24, 2024 அன்று நிறைவடைகிறது.
இது குறித்து இந்நிறுவன மேலாண் இயக்குனர் நிலேஷ் ஷா கூறுகையில், “வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது மற்றும் இயங்குநிலை காரணமாக பல சிறப்பு வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது.
உதாரணமாக பி.எல்.அய். (உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை)-இன் அறிமுகம் மற்றும் சீனா +1அய் நாடும் உலகம், இந்தியாவில் மின்னணுவியல் உற்பத்தித் துறைக்கான வாய்ப்பை உருவாக்கியது. எதிர்கால வளர்ச்சிக்கான அதன் வாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிர்வாக மாற்றத்தைக் எதிர்நோக்கும் நிறுவனத்திலும் இதேபோன்ற வாய்ப்பு எழலாம்.
சிறப்பு சூழ்நிலைகளால் வழங்கப்படும் இந்த வாய்ப்புகள் பெரு மதிப்பு, நடுத்தர மதிப்பு அல்லது சிறிய மதிப்பு கொண்ட என எந்த அளவிலான நிறுவனங்களிலும் எழலாம். எங்களின் நிதியானது எந்த ஒரு சந்தை மதிப்பு அல்லது துறையால் வரையறுக்கப்படவில்லை. இந்த நெகிழ்வுத்தன்மை, வாய்ப்புகள் எங்கிருந்தாலும் அவற்றைத் தேடி முதலீடு செய்ய எங்களை அனுமதிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment