கட்சிப் பிரச்சினையை வெளியில் பேசுவதா? தமிழிசை சவுந்தரராஜனுக்குக் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 10, 2024

கட்சிப் பிரச்சினையை வெளியில் பேசுவதா? தமிழிசை சவுந்தரராஜனுக்குக் கண்டனம்

சென்னை, ஜூன் 10 பாஜக மேனாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதில் அளித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை – மேனாள் தலை வர் தமிழிசை சவுந்தரராஜன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தக வல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலை வர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில், நான் கட்சிக்காக கடுமையாக உழைக்கக் கூடியவள். நான் உட்கட்சி அய்டி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோச மாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேனாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.

ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும், சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்பட வில்லை. உங்களுக்கு என்ன கவலை?.
இன்னொன்று, நாங்கள் எல்லாம் இரண்டாமிடம் வரக்கூடியவர்கள் இல்லை. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றி பெறக் கூடிய நபர்கள். ஆனால், இரண்டாம் இடம் வந்துவிட்டோம்.

அதிமுக – பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. அண்ணாமலையிடம் அதை நீங்கள் கேட்கலாம். எனக்குக் கருத்து இருந்தால் நான் சொல்வேன்.
நான் மாநில தலைவரை எதிர்க்கிறேன் என்று சொல்ல மாட்டேன். கூட்டணி அமைத்தால் வென்று இருப்போம் என்று கூறுகிறேன். அவ்வளவுதான், என்று சொன்னார்.

இந்த நிலையில் பாஜக மேனாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதில் அளித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை – மேனாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, பாஜககாரர்களாகிய நாங்கள் ஏற்கெனவே தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காததால் சோகமாக உள்ளோம். பாஜக அரசமைப்புச் சட்டத்தின்படி மாநிலத் தலை வர்தான் மாநிலப் பிரிவின் உச்ச முடிவெடுப்பவர். அவர்தான் முடிவுகளை எடுக்க கூடியவர்.

மூத்தவர்கள் முதல் ஜூனி யர்கள் வரை மாறுபட்ட கருத்து களைக் கொண்ட எவரும் ஊடகங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது தொலைக்காட்சிகளிலும், பிற இடங்களிலும் மிகவும் சங்கடமாக உள்ளது. அவர்கள் இதைத் தவிர்த்து கட்சிக்கு உள்ளே நடக்கும் கூட்டங்களில் இதைப் பேச வேண்டும்.
அண்ணாமலை கடந்த 3 ஆண்டுகளில் எங்களுக்கு மரியா தையும், கண்ணியமும் அளித்து, நல்ல அரசியல் தலைவர்களாக எங்களை வளர்த்தெடுத்தார். அதில் எதையும் இழக்க விரும்ப வில்லை. தமிழ்நாடு முழுவதும் 19 இடங்களில் 11% வாக்குகளும். போட்டியிட்ட இடங்களில் மொத்தமாக 20% வாக்குகளும் பெற்றுள்ளோம்..
இங்கு ஆட்சிக்கு வருவதற்காக எங்கள் கட்சியை பன்மடங்கு வலுவாக்க வேண்டும். அதற்காக பணிகளை கட்டமைக்க விரும்பு கிறோம் என்று எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment