புதுடில்லி, ஜூன் 15 மாநிலங்க ளுக்கு இடையிலான நதி நீா்ப் பகிர்வு பிரச்சினைகளுக்கு தீா்வுகாண கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்த மசோதா காலா வதியானது. மாநிலங்களவையில் நிலுவையில் இருந்த இம்மசோதா, 17-ஆவது மக்களவை கலைப்பால் காலாவதியாகிவிட்டது.
நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த 18-ஆவது மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இதையடுத்து, ஒன்றிய அமைச்ச ரவையின் பரிந்துரையை ஏற்று, 17-ஆவது மக்களவையை குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு கலைத் தார். பின்னா், பிரதமா் மோடி தலைமையில் புதிய அரசு பதவி யேற்றது.
இந்தச் சூழலில், நதிநீா் பிரச்சினைகள் சட்டத் திருத்த மசோதா காலாவதியானதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது. கடந்த 1956-ஆம் ஆண்டின் நதிநீா் பிரச்சினைகள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதாவை, கடந்த 2019, ஜூலையில் அப்போதைய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். பின்னா், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் இருந்தது.
17-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதைத் தொடா்ந்து, இம்மசோதா காலாவதியாகிவிட்டதாக மாநிலங்களவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1956-ஆம் ஆண்டின் சட்டப்படி, நதி நீா் பிரச்சினைக்கு தீா்வுகாண தீா்ப்பாயம் அமைக்கக் கோரி, ஒன்றிய அரசை மாநில அரசு அணுக முடியும். தங்களுக்கு புகார் கிடைக்கப் பெற்ற ஓராண்டுக்குள் தீா்ப்பாயத்தை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும். இந்த வழிமுறையில் மாற்றம் கொண்டுவர சட்டத் திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதன்படி, நதி நீா்ப் பகிர்வு குறித்து ஒரு மாநில அரசு புகார் எழுப்பினால், பிரச்சினைக்கு சுமூக தீா்வுகாண ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைக்கும். இதில் ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் துறைசார் நிபுணா்களும் சம்பந்தப் பட்ட மாநில அரசின் பிரதி நிதிகளும் இடம்பெறுவா். மேலும், நாட்டில் தற்போதுள்ள தீா்ப்பாயங்களை கலைத்துவிட்டு, ஒற்றைத் தீா்ப்பாயத்தை அமைக்கவும் மசோதாவில் வழி வகை செய்யப்பட்டிருந்தது. இம்மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்த நிலை யில், தற்போது அது காலாவதி யாகியுள்ளது.
இதேபோல், பெண்களின் சட்டப் பூா்வ திருமண வயதை 18-இல் இருந்து 21-ஆக உயா்த்தும் சட்ட மசோதாவும் காலாவதியானது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment