திருச்சூர், ஜூன் 15- கேரளாவில் முதல் முதலாக ஒரு இடத்தைப் பிடித்துவிட்டோம் என்று மிதப்பில் இருந்த பாஜகவிற்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நீண்ட காத்திருப்புகளுக்குப் பிறகு கேரளாவில் முதல் முதலாக நடிகர் ஒருவர் பாஜக சார்பில் போட்டியிட்டு மக்களவை செல்கிறார்.
இதை மோடியே பெருமைபடப் பேசி வருகிறார். இந்த நிலையில் கேரளாவில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் செல்கிறார்கள். இருவருமே இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி சார்பில் தலா ஒருவர் தேர்வு செய்ய உள்ள நிலையில் ஆளுங்கட்சி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சீட்டு 2019இல் ராகுல் காந்திக்கு எதிராக வயநாட்டில் போட்டியிட்ட மூத்த கம்யூனிஸ்ட் உறுப்பினர் பி.பி.சுனீர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
அதேபோல் காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஹாரிஸ் பீரான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளும் முஸ்லிம் பிரதிநிதிகளை மாநிலங்களவை உறுப்பினர்களாக அனுப்புவது கேரள அரசியலில் ஹிந்துத்துவ அமைப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றிய அமைச்சரவை யில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு தராத நிலையில் இந்தியா கூட்டணியில் அதிகமான எண்ணிக்கையில் சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்கள் நாடாளுமன்றம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment