மூத்த வழக்குரைஞர் கரூர் தமிழ் ராஜேந்திரன் என்னை அழைத்தார். “நண்பரே, தாராபுரத்தில் தான் இருக்கிறீர்களா? ஒரு நண்பரை சந்திக்க வேண்டும் செல்லலாமா?” என்றார் .
அய்யா குறிப்பிட்ட வீடு வந்தது. உள்ளே சென்றோம். அங்கே மாதா சிலையும் குழந்தை இயேசு சிலையும் இன்னும் சில சிலைகளும் இருந்தன. எங்களை வரவேற்ற அந்த வீட்டினுடைய உரிமையாளர் மாதா சிலையிலும் இயேசு சிலையிலும் எண்ணெய் வடிந்து கொண்டே இருப்பதாக காட்டினார்.
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை அவர் தட்டில் எண்ணெய்யை ஊற்றி அதற்கு நடுவில் அந்த சிலைகளை நிறுத்தியுள்ளார். எந்த சிலையும் எண்ணெய் தட்டுக்கு வெளியே இல்லை. அப்போது பழைய கதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.
இது முன்பு பிள்ளையார் பால் குடித்த கதை வேறு வடிவில் வெளிவந்துள்ள புது ரிலீஸ் என்று.
ஆச்சரியம் என்னவென்றால், இதை பார்க்க ஜெர்மனியில் இருந்து ஒரு சிஸ்டரும் வந்திருந்தார். இன்னும் பலரும் வந்து கொண்டே இருந்தனர்.
நாங்கள் திரும்பியபோது அய்யாவிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன் அவருக்கு எண்ணெய் செலவு அதிகம். நிச்சயமாக இது பிரபலமான பிறகு புட்டியில் அடைத்து அந்த எண்ணெயை குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வார் என்றேன்.
அறிவியல் உலகு எவ்வளவு விரைந்து முன்னேறினாலும் மூடநம்பிக்கையும் அதற்கு சளைத்தது அல்ல என்பதை அறிவுறுத்தும் பாடமாக இந்த நிகழ்வு இருந்தது.
– பெரியார் குயில், தாராபுரம்
No comments:
Post a Comment