இம்பால், ஜூன் 16- மணிப்பூா் தலைநகா் இம்பாலில் முதலமைச்சா் பிரேன் சிங்கின் அதிகாரபூா்வ இல்லத்துக்கு அருகே உள்ள ஒரு கட்டடத்தில் 15.6.2024 அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினா் சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இம்பாலில் மாநில அரசின் தலைமைச் செயலக வளாகத்தில் முதலமைச்சரின் அதிகாரபூா்வ இல்லம் அமைந்துள்ளது. இந்த வளாகத்துக்கு அருகே கைவிடப்பட்ட நிலையிலுள்ள தனியார் கட்டடத்தில் 15.6.2024 அன்று பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இக்கட்டடம், மறைந்த அய்ஏஎஸ் அதிகாரி டி.கிப்கென் குடும்பத்தினருக்கு சொந்தமானதாகும். மாநிலத்தில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தைத் தொடா்ந்து, இக்கட்டடத்தை அவா்கள் கைவிட்டனா்.
இந்த தீ விபத்தால் முதலமைச்சர் இல்லத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. மணிப்பூரில் இரு சமூகத்தினா் இடையே அவ்வப்போது மோதல்கள் நீடித்து வருகின்றன. வன்முறைச் சம்பவங்களில் இதுவரை சுமார் 220 போ் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment