அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

featured image

சென்னை, ஜூன் 16- அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 46 சத வீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, அகவிலைப் படி உயர்வு கடந்த ஜனவரி 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டிருந்தது.
அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2016ஆம் ஆண் டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட் டுள்ளது.
அந்தவகையில், மாநில ஊழியர்களுக்கான அக விலைப்படியை 1.1.2024 முதல் 9விழுக்காடு உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அக விலை ஊதியத்தில் 239% உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப் படி நிலுவைத்தொகை நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு சேவை மூலம் வழங்கப்பட உள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் கிட்டத்தட்ட 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். இதன் காரணமாக மாநில அரசுக்கு ரூ.2,846 கோடி வரை கூடுதல் செலவு ஏற்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment