குவாலியர், ஜூன் 13- மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் ஏராளமான எலிகள் துள்ளிக் குதித்து ஓடும் காணொலி சமூக வலைத்தளங்களில் வைர லானதால், பல்வேறு கேள் விகள் எழுந்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் இந்த காணொலி அதன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டு, கமலா ராஜா மருத்துவமனையில் நோயாளிகளை விடவும் எலிகள் அதிகம் உள்ளது. இந்த மாநிலத்தின் சுகாதாரத் துறையின் நிலைமை இப்படித்தான் உள்ளது என்று தெரிவித் திருக்கிறது. இந்த காணொலி வைரலான நிலையில், மருத் துவமனை டீன் கூறுகையில், மருத்துவமனையில் எலி களின் தொல்லையைக் கட்டுப்படுத்துமாறு கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன் என்றார்.
ஏற்கனவே மருத்துவ மனையில் எலித் தொல் லைக் கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது என்றார். மேலும், அங்கு நோயாளிகள் இருக்கும் போது இதுபோன்று நடக்காது என்றும் உறுதியளித்திருக்கிறார். ஆனால், இந்த காணொலியில், உள்நோயாளிகள் பிரிவில், நோயாளிகள் உடமைகள் இருக்கும்போதுதான் எலிகள் இந்த அட்டகாசத்தைச் செய்திருக்கும் என்பதை அங்கிருக்கும் பொருள்களே உணர்த்துகின்றன. ஆனால், எலிகளால் வரும் நோய்களால் அத னைப் பார்த்துதான் மனி தர்கள் பயப்படும் காலமாக இருக்கிறது. நோயைப் போக்க மருத்துவமனைக்கு வந்தால், அங்கு பத்து நோய் பரவும் அபாயம் ஏற்படும்போல இந்த எலிகளால் என்கிறார்கள் இந்த காணொலியைப் பார்த்த மக்கள்.
No comments:
Post a Comment