புதுடில்லி, ஜூன் 15- காவிரி ஒழுங்காற்றுக் குழுவின்
97-ஆவது கூட்டம் டில்லியில் உள்ள காவிரிமேலாண்மை ஆணைய அலுவலகத்தில், ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று (14.6.2024) மதியம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசின் உறுப்பினரும், நீர்வள ஆதாரத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளருமான எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண் டனர். மற்ற மாநில உறுப்பினர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். கூட்டத்தின் தொடக் கத்தில் 4 மாநிலங்களிடம் இருந்தும் நீர் இருப்பு, நீர்வரத்து உள்ளிட்ட புள்ளி விவரங் கள் பெறப்பட்டன. பின்னர் தமிழ்நாடு – உறுப்பினர் பேசும்போது, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2.054 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் பாக்கி வைத்திருந்ததாகவும், இந்த ஜூன் மாதத்தில் பிலிகுண்டுலுவில் தரப்பட – வேண்டிய9.19டி.எம்.சி. தண்ணீரை முழுமையாகத் தர கருநாடகத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டார். ஆனால் கருநாடக அதிகாரிகள், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என மறுத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஒழுங்காற்றுக்குழு தலைவர் இதுபற்றி அடுத்த கூட்டத்தில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப் – படும் என்றும், குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment