திராவிட மாடல் ஆட்சியில் பழங்குடி இளைஞர்கள் தொழில் முகவர்களாகி சாதனை! தமிழ்நாட்டில் புத்தாக்க நிறுவனங்கள் 8,416ஆக அதிகரிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

திராவிட மாடல் ஆட்சியில் பழங்குடி இளைஞர்கள் தொழில் முகவர்களாகி சாதனை! தமிழ்நாட்டில் புத்தாக்க நிறுவனங்கள் 8,416ஆக அதிகரிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டு!

featured image

சென்னை, ஜூன் 13– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புத்தாக்கத் தொழில் திட்டத்தால் தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட – பழங்குடியின இளைஞர்கள் இந்தியாவிலேயே முதல் முதலாக தொழில் முகவர் களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளனர் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்க ளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களின் திராவிட மாடல் அரசு 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு புத்தொழில் நிறுவனங்களுக்கு அளித்துவரும் ஊக்கம் காரணமாகத் தமிழ்நாட்டில் 6,384 புத்தொழில் நிறுவ னங்கள் புதிதாகத் தொடங்கப் பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களால் மேற் கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் உரு வாகியுள்ளதோடு பலருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

திராவிட மாடல் அர சால் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 20.9.2023இல் முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது.
2021-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ‘ஸ்டார்ட் அப்‘ நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032. இன் றைய நிலவரப்படி இது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 8,416-அய் எட்டியுள்ளது. மகளிர் ‘ஸ்டார்ட் அப்‘களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 966 ஆக இருந்தது. தற்போது மூன்று மடங்குமேல் அதிகரித்து 3,163 ஆக உயர்துள்ளதே இந்த அரசின் செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.
ஸ்டார்ட் அப் நிறு வனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்துச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது.
இதில் தமிழ்நாடு முதல் நிலையை பிடித்தி ருப்பதிலிருந்தே இந்த அரசின் சாதனையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களின் திராவிட மாடல் அரசு அனைத்துச் சமூ கத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரால் நிறுவப்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து ரூ.80 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 38 நிறுவனங்களுக்கு ரூ.55.20 கோடி பங்கு முதலீடுகள் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அனை வரையும் உள்ளடக்கிய புதுயுகத் தொழில் முனைவு வளர்ச்சியினை அடையும் நோக்கத்தில் தமிழ்நாடு அர சால் தாழ்த்தப்பட்ட சமூகம், பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டமானது 2022- 2023ஆம் நிதி ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டமானது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம், இப்பிரிவினை சார்ந்த தொழில்முனைவோர்களால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங் களில் அரசு முதலீடு செய்து வருகின்றது.கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில், நாட் டின் முன்மாதிரியாக விளங் கும் இத்திட்டத்தின் வாயி லாக 38 புத்தொழில் நிறு வனங்களுக்கு ரூ.55.2 கோடி பங்கு முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மட்டு மல்லாது, சேலம், கன்னி யாகுமரி,மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய பல்வேறு மாவட்டத்தினை சேர்ந் தோர் இதன் வாயிலாக பயன் பெற்றுள்ளனர்.

இயந்திரவியல், வேளாண் தொழில்நுட்பம், ஊடகத் துறை, செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்தொழில் நுட்பம், பசுமை எரிவாயு தயாரித்தல், இணைய வழி வணிகம், உணவு மதிப்புகூட்டுதல், விண்வெளித் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் புத்தாக்க வணிக மாதிரிகளை கொண்டு இயங்குபவையாக இந்த நிறுவனங்கள் உள்ளன. இப்படிப் பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் தாழ்த்தப்பட்ட சமூகம், மலைவாழ் இன இளைஞர்களுக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தி, அவர்களை தொழில் முகவர் களாக உயர்த்துவதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனை பட்டியலின பழங்குடிமக்கள் பாராட்டி வரவேற்கிறார்கள்.

No comments:

Post a Comment