ரூ.80,210 கோடி கடன் வழங்கி சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சியில் கேரளா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

ரூ.80,210 கோடி கடன் வழங்கி சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சியில் கேரளா

featured image

திருவனந்தபுரம், ஜூன 5- கேரளத்தில் 2023-2024 நிதியாண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) மாநிலத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ,80,210 கோடி வழங்கப்பட்டுள்ளன.

இது 2020-2021இல் ரூ.59,971 கோடியாக இருந்துள்ளது. உற்பத்தித் துறையில் அதிக தொழில் முயற்சிகள் கேரளத்தில் தொட ங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

அனுமதிக்கப்பட்ட கடன்களில் 30.57 சதவிகிதம் உற்பத்தித் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில கூட்டுறவு வங்கிகள் கொடுத்த கடனையும் கணக்கிட்டால், அந்தத் தொகை ரூ. ஒரு லட்சம் கோடியைத் தாண்டும்.

கடந்த நிதியாண்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கேரள வங்கி மட்டும் ரூ.2,500 கோடி கடன் வழங்கியுள்ளது. இரண்டாவது பினராயி அரசு பதவிக்கு வந்த பிறகு, தொழில் முனைவோர் ஆண்டு திட்டம் அறிவிக் பட்டது. ஆண்டுக்கு ஒரு லட்சம் தொழில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அறிவிக் கப்பட்ட முதல் ஆண்டில் 1,39,840 நிறுவனங்களும், கடந்த ஆண்டில் 1,03,596 நிறுவனங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

தொழில் முனைவோர் ஆண்டு திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் ரூ.15,469.30 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. 5,18,230 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழில் முனைவோர் ஆண்டு திட்டத்தை நாட்டிலேயே ‘சிறந்த நடைமுறை’யாக ஒன்றிய அரசு தேர்வு செய்திருந்தது.

ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக 1000 நிறுவனங்களை உயர்த்து வதற்காக ‘மிஷன் 1000’ என்கிற திட்டத்தையும் அர சாங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment