முத்தமிழறிஞர் கலைஞர் மறைவுக்குப் பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த 5 தேர்தலிலும் வெற்றி மகுடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

முத்தமிழறிஞர் கலைஞர் மறைவுக்குப் பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த 5 தேர்தலிலும் வெற்றி மகுடம்

featured image

சென்னை, ஜூன்.6- கலைஞர் மறைவுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த 5 தேர்தல்களிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
தி.மு.க. தலைவர் கலைஞர் 2018ஆம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு,மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் ஆனார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் முதன் முதலில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க.தலைமையிலான கூட் டணி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38இல் வெற்றி பெற்றது. அதில் தி.மு.க. 24 தொகுதிகளில் வெற்றிக் கனியை பறித்து 33.52 சதவீத வாக்குகளை பெற்றது.
அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. சந்தித்தது. அதில் மொத்தமுள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் தி.மு.க 214 இடங்களையும், 5.090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் தி.மு.க. 2,095 இடங்களிலும் வெற்றிபெற்றது. மேலும் 44.27 சதவீத வாக்குகளை பெற்று தி.மு.க.சாதனை படைத்தது.

சட்டமன்ற தேர்தல் வெற்றி
அதன்பின் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடந்தது.
அதில் தி.மு.க. 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மு.க.ஸ்டாலின், முதலமைச்ச ராக பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் தி.மு.க. 37.70 சதவீத வாக்குகளைப் பெற்றது.
அவரது தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தது.
5 தேர்தல்கள்
பின்னர் 2022ஆம் ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில், தி.மு.க. அனைத்து மாநகராட்சி உள்பட பெரும்பாலான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளையும் கைப்பற்றியது. 43 மேலும் அந்த தேர்தலில் 43 சதவீத வாக்குகள் பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது.
அதில் தி.மு.க. மட்டும் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை தான் சந்தித்த 5 தேர்தல்களிலும் சரித்திர வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் என்று தி. மு.க.வினர் பெருமிதத்துடன் கூறினர்.

No comments:

Post a Comment