சென்னை, ஜூன் 10- அய்அய்டி, அய்அய்எஸ்சி உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வின் முதன்மை தோ்வு முடிவுகள் (9.6.2024) வெளியாகின. அதில், 48,248 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நாடு முழுவதும் உள்ள அய்அய்டி, அய்அய்எஸ்சி போன்ற ஒன்றிய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங் கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும்.
அந்தத் தோ்வு முதல் நிலை, முதன்மை தோ்வு என இரு கட்டங்களாக நடத்தப் படும். அந்த வகையில் நிகழாண்டுக்கான ஜேஇஇ முதன்மை தோ்வு மே 26ஆம் தேதி நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 1,80,200 போ் எழுதினா். இந்நிலையில், அதற்கான முடிவுகள் http://jeeadv.nic.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியாகின. நிகழாண்டில் 7,964 மாணவிகள் உள்பட மொத்தம் 48,248 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதில் டில்லி அய்அய்டி மண்டலத்தைச் சோ்ந்த மாணவா் வேத் லகோட்டி மொத்தமுள்ள 360 மதிப்பெண்களுக்கு 355 பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றார்.
பெண்கள் பிரிவில் மும்பை அய்அய்டி மண்ட லத்தைச் சோ்ந்த மாணவி திவிஜா தா்மேஷ்குமார் படேல் 322 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.
அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் 4 இடங்களை சென்னை அய்அய்டி மண்டலத்தைச் சோ்ந்த மாணவா்கள் பிடித் தனா். இரண்டாம் இடத்தை டில்லி மண்டலத்தைச் சோ்ந்த ஆதித்யாவும், மூன் றாம் இடத்தை சென்னை அய்அய்டி மண்டலத்தைச் சோ்ந்த போகல்பள்ளி சந்தேஷும் பிடித்தனா்.
முதல் 500 இடங்களில் சென்னை மண்டலத்தைச் சோ்ந்த 145 பேரும், மும்பை மண்டலத்தைச் சோ்ந்த 136 பேரும், டில்லி மண்டலத்தைச் சோ்ந்த 122 பேரும் இடம்பெற்றுள்ளனா். இத்தோ்வில் வெளிநாட்டைச் சோ்ந்த 7 மாணவா்களும், வெளிநாடு வாழ் இந்தி யா்கள் 179 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தோ்வெழுதிய 2,465 மாணவா்களில் 594 போ் தோ்ச்சியடைந்து உள்ளனா். சென்னை அய்அய்டி மண்டலத்தில் மட்டும் 11,180 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, நாடு முழுதுள்ள ஒன்றிய உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கைக்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் ஜேஇஇ இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment